உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

பேரணி

Update: 2024-08-07 04:52 GMT
உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர் பேரணி பெரம்பலூரில் நடைபெற்றது ..... உலகத் தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது, இதில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில் உலக தாய்ப்பால் வார விழாவில் இறுதி நாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி இன்று காலை பெரம்பலூர் பாலக்கரை பகுதியிலிருந்து செவிலியர் கல்லூரி மாணவிகளின் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்த இந்த பேரணி மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், கடைவீதி, வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது, பேரணியில் கலந்துகொண்ட செவிலியர் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்தும் கோஷமிட்டபடி சென்றனர். இந்த பேரணியில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News