வாலிபரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி உறவினர்களுடன் பெண் சாலை மறியல்
சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த ஒரு பெண் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான். கடந்த 2020-ம் ஆண்டு முதல் கண்வன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபர், சென்னையில் பணிபுரிந்தார். அவ ருக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற் போது அந்த நபர், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இது குறித்து சென்னை ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள் ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக எழுதி கொடுத் துள்ளார். பின்னர் அவர் வேலையை விட்டுவிட்டு, தற்போது புதுக்குறிச்சி கிராமத்தி லேயே இருந்து வருகிறார். அந்தப் பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார். அதில் அந்த கு நபரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறினார். ஆனால் அந்த பெண் முறையாக விவாகரத்து செய்ய வில்லை என்பதால் சட்டப்படி திருமணம் செய்து வைக்க இய லாது என்று போலீசார் கூறியதால், அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.