பொள்ளாச்சியில் உலக தாய்ப்பால் வார விழா தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மருத்துவர் அமுதா பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு..
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியமாக இருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் அமுதா பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு.,
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியமான இருந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் அமுதா பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு., பொள்ளாச்சி.. ஆகஸ்ட்..08 ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கடைபிடிக்கப்படுகிறது, இந்நிலையில் இந்த வாரங்களில் தாய்ப்பால் ஊட்டுதல் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் இன்று தாய்ப்பால் ஊட்டுதல் குறித்து பொது மக்களிடையே மற்றும் பிறந்த குழந்தையின் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது, இதையடுத்து குழந்தைகள் நல மருத்துவர் அமுத சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஆரோக்கியம் பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது., குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது., குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம், இதைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இணை உணவுகளோடு சேர்த்து தாய்ப்பால் கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரித்து குழந்தைகளுக்கு எந்த வித நோயும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும், தற்போது வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவது எண்ணிக்கை குறைந்து வருவதால் தாய்ப்பால் இல்லாமல் பல்வேறு வகையான மாட்டுப்பால், பவுடர் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் அமுதா சுரேஷ் தெரிவித்தார்., இந்த தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சியில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொண்டனர். பேட்டி- அமுதா சுரேஷ்., - மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்-பொள்ளாச்சி., ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649.,