சேலத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

போலீசார் விசாரணை

Update: 2024-08-08 07:18 GMT
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 48). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் அங்குள்ள ஒரு கோவில் அருகே ஆட்டோவை ஓட்டி சென்றார். அப்போது நாய்கள் குறுக்கே வந்தது. நாய்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் ஆட்டோவை திருப்பினார். அப்போது நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த ரவிக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News