பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.,

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.,

Update: 2024-08-08 13:22 GMT
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் வடக்கு ஒன்றிய கட்டிடத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது., பொள்ளாச்சி.. ஆகஸ்ட்.08., பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் இன்று ஒன்றிய குழு தலைவர் விஜய ராணி தலைமையில்  நடைபெற்றது. துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபா, சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்., இந்த கூட்டத்தில் ஒரு மனதாக 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கிராமங்களில் சாலை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும், ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி பலுதடைந்த கட்டடங்கள் மற்றும் சுற்று சுவர்களை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஒன்றிய குழு உறுப்பினர்கள் முன்வைத்து பேசினர்., மேலும் வேளாண் துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அந்த துறையில் உள்ள திட்டங்களை எடுத்துரைத்து பேசினார் இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்..

Similar News