போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு

மதுராந்தகம் அருகே தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு

Update: 2024-08-09 15:05 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் பார்க் இண்டஸ்ட்ரியல் பிரைவேட் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்..இந்த நிலையில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி நேற்று தொழிற்சங்கம் சார்பாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரே மாபெரும் கண்டன உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 24 பெண்கள் 30 ஆண்கள் கலந்து கொண்டனர். இன்று இந்த தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்த பொழுது தொழிலாளர்களை பணிக்கு செல்ல விடாமல் கேட்டை பூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு காலை 9 மணி முதல் இருந்தே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஐந்து பெண் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்த நிலையில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அந்த இடத்துக்கு வந்த மதுராந்தகம் வட்டாட்சியர் துரைபாபு தொழிலாளர்களிடமும் தொழிற்சாலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி வேலையை விட்டு நிறுத்தியவர்களை மீண்டும் வேலைக்கு அனுமதித்தனர்.

Similar News