பொத்தனூரில் இடை நின்ற மாணவரை இருப்பிடத்திற்கே சென்று மீண்டும் பள்ளியில் சேர்பு
பரமத்தி வேலூர் வட்டம் பொத்தனூரில் இடை நின்ற மாணவரை இருப்பிடத்திற்கே சென்று மீண்டும் பள்ளியில் சேர்பு.
கபிலர்மலை ஒன்றியத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி தலைமையிலான பள்ளிக்கல்வித்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி தலைமையிலான பள்ளிக்கல்வித்துறையினர் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பொத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று இடைநின்ற மாணவர் நவீனின் இருப்பிடத்திற்கே சென்று மாணவர்,பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆய்வின் போது மாவட்டக் கல்வி அலுவலர் இடைநிலை (பொ) க.விஜயன், சமக்ர திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர் வ.குமார், பள்ளித் துணை ஆய்வாளர் கை.பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, வட்டார வளமை/ ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.