அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

Update: 2024-08-10 08:04 GMT
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில், ஒன்றிய கழக செயலாளர் டாக்டர். ரங்கராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு கழகத்தின் உறுப்பினர் உரிமைச் சீட்டு அடையாள அட்டையை வழங்கி கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது, ஒன்றிய அவைத் தலைவர், ஊராட்சிமன்ற தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், கழக பொறுப்பாளர்கள், மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News