கபிலர்மலை பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு.

பரமத்தி வேலூர் வட்டாரம் கபிலர்மலை பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-08-10 12:01 GMT
பரமத்தி வேலூர், ஆக.10- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தி லிருந்து கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம்,அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர்,மாணிக்கநத்தம், ஆனங்கூ ர், சாணார்பாளையம் பொத்தனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12 மணி அளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணி ஆகியும் மின் சப்ளை கொடுக்கப்படவில்லை. சுமார் 7 மணி நேரம் ஆகியும் மின்சாரம் வரவில்லை. இந்த மின் தடை இப்பகுதியில் அடிக்கடி ஏற்படுகிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அறிவிக்கப்படாத மின் தடையால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டனர். 12 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் 7 மணி வரையிலும் வராததால் வணிக நிறுவனங்கள், பால் கடைகள், குளிர்பானம் விற்பனை செய்யும் கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பல்வேறு தொழிற்சாலைகளும் மின்தடையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. முன் அறிவிப்பின்றி அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால் இந்த மின்தடை பற்றி இதுவரை மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கபிலர்மலை துணை மின் நிலைய த்திலிருந்து மின்சாரம் பெறும். பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மின் தடை ஏற்பாமல் இருக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News