தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்க பேரவை கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.,

சேரகுலவேளார் சமூத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகும் சலுகைகள் இல்லை தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்க பேரவை கூட்டத்தில் கண்டனம்..

Update: 2024-08-11 11:15 GMT
சேரகுலவேளார் சமூத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகும் சலுகைகள் இல்லை தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்க பேரவை கூட்டத்தில் கண்டனம்.. பொள்ளாச்சி..ஆகஸ்ட்..11    சேரமான் பெருமாள் நாயனாரின் 94-வது குருபூஜை வழிபாட்டு விழா மற்றும் தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் 75 ஆவது பேரவை கூட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது., இதில் கோவை,திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் சேரகுல வேளாளர் சமூகத்தினர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்., அப்போது தமிழ் கடவுள் முருகர்,வள்ளி திருமணம் குறித்து இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேரகுல சமூக பெண்கள் அரங்கேற்றிய வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது., இதை ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்      பின்னர் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் N.S. மணி அளித்த பேட்டியின் போது சேர குல வேளாளர் சங்கம் சார்பில் பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நீதியரசர் மோகன் அவர்களின் பரிந்துரைப்படி இந்த சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.,  ஆனால் இதுவரை கல்வியை வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை இதனால் இந்த சமூகத்தினர் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக இச்சமூக மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.,

Similar News