மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்க கூட்டத்தில்

மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்க கூட்டத்தில்

Update: 2024-08-12 04:16 GMT
தமிழ்நாட்டில் உள்ள காலாவதியான சுங்கட் சாவடிகளை அகற்ற வேண்டும் என மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் காலாவதியான சுங்கட் சாவடிகளை அகற்றவில்லை என்றால் தமிழ்நாட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில் மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்கத்தின் 10 -ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகி பதவியேற்பு விழா நிகழ்ச்சி சங்கத்தின் வழக்கறிஞர் திலகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்க வளர்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக கே. ராமன் செயலாளராக மோகன் பொருளாளராக குமார் ஆகியோர்களுக்கு சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் சங்கத்தின் தலைவர் பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு லாரி மூலம் பொருட்களை ஏற்றி செல்ல வேண்டும் என்றால் இதில் அதிகப்படியாக சுங்கட் சாவடிகளிலே கட்டணங்கள் கட்ட வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் வரக்கூடிய பணத்தில் பாதி பணங்கள் இந்த சுங்கத் சாவடிகளிலே வசூலிக்கப்படுகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு காலாவதியான சுங்கட்சாவடிகளை இன்னும் மத்திய மாநில அரசுகள் அகற்றப்படவில்லை என குற்றம் சாட்டினர். இந்த காலாவதியான சுங்கட்சாவடிகளை அகற்ற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் எது நாள் வரைக்கும் மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் மத்திய மாநில அரசு அதிகாரிகள் உடனடியாக காலாவதியான சுங்கட்சாவடிகளை அகற்ற வேண்டும் எனவும் உங்க கட்டணங்களை குறைக்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Similar News