பரமத்தி அருகே இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை.

பரமத்தி வேலூர் அடுத்துள்ள பரமத்தி அருகே இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை.

Update: 2024-08-12 08:08 GMT
பரமத்திவேலூர், ஆக.12- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வெள்ளாள பாளையம், வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45).இவரது மனைவி பிரேமா(35) இவர்களுக்கு பிரனேஷ் (18) என்ற ஒரு மகனும், சஞ்சனா (14) என்ற ஒரு மகளும் உள்ளனர். பிரனேஷ் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .சி .ஏ முதலாம் ஆண்டு கல்லூரியில் படித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக இரண்டாம் ஆண்டை வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். ஆனால் பிரனேஷின் பெற்றோர்கள் பி.சி.ஏ முடித்துவிட்டு வெளிநாடு செல்லலாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் பிரனேஷ் வெளிநாடு சென்று வேலை பார்த்துக்கொண்டே படிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு பெற்றோர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி பிரனேஷ் மீண்டும் பெற்றோரிடம் வெளிநாடு செல்ல போவதாகவும் தன்னை அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர்கள் பிரனேசை வெளிநாடு அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த பிரனேஷ் ஐந்தாம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அவரது தாய் சஞ்சனா வீட்டுக்கு அருகே உள்ள கிஷோர் என்பவரின் உதவியுடன் பிரனேஷை வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரனேஷ் விஷம் அருந்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனையடுத்து பிரனேசை மேல் சிகிச்சைக்காக அவரது பெற்றோர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரனேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) காலை உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து வெளிநாடு செல்ல பெற்றோர்கள் அனுப்பாததால் பிரனேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News