வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி
அருள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கல்பட்டி ஊராட்சி 7-வது வார்டு விநாயகா நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று அருள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். அவர் தனது சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து விநாயகா நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இந்த பணியை அருள் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், துணைத்தலைவர் ராஜா, செட்டிசாவடி ஏழுமலை, பாலு, கே.ஏ.கோவிந்தராஜ், ராஜா, வடிவேல். பழ அருள், வார்டு உறுப்பினர்கள் பழனியம்மாள், சபியாகனம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.