அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில்
பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சேலம் விம்ஸ் மருத்துவமனை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் கற்பித்தல் தளங்களுக்கான மின்- உள்ளடக்கம் என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் சோனா கல்லூரி பேராசிரியை குல்சன் தாஜ் கலந்து கொண்டு கற்பித்தல் தளங்களுக்கான மின்- உள்ளடக்கம் பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இதில் துறையை சேர்ந்த அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனிதா செய்திருந்தார்.