நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கிழக்கு கடற்கரை சாலை சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்படும் கடைகளுக்கு உரிய இழப்பீடு தராத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டித்து அனைத்து வணிகர்கள் பொதுநல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-12 09:19 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள வெண்ணாங்குப்பட்டு கோட்டை கயக்காடு பகுதியில் கிழக்குகடற்கரை சாலையில் இயங்கி வரும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகளை மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலைத்துறையால் நடைபெற்று வருகிறது சாலை விரிவாக்கத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட உள்ளன.. கடைகளை அப்புறப்படுத்த சொல்லும் 50 கடைகளுக்கு நெடுஞ்சாலைதுறை உரிய இழப்பீடு கொடுத்து சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பாக முன்கூட்டியே கோரிக்கை வைத்தனர்.இதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காதில் போட்டுக் கொள்ளாமல் அவர்கள் சாலை பணியை மேற்கொண்டு வருகின்றன.. ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து இன்று காஞ்சி மாவட்ட அனைத்து வியாபாரிகள் பேரமைப்பு சார்பில், மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் வெண்ணாங்குபட்டு பேருந்து நிலையம் அருகில் இடைக்கழி நாடுஅனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

Similar News