போதைப் பொருள் இல்லா தமிழகம் உறுதி மொழி மொழி
போதைப் பொருள் இல்லா தமிழகம் உறுதி மொழி மொழி
தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்கும் நோக்கில் போதைப் பொருள் இல்லா தமிழகம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் காணொளி காட்சி மூலம் உறுதி மொழியை வாசிக்க தமிழகம் முழுவதும் உள்ள 11 மாவட்டங்களைச்24 பள்ளிகளை சேர்ந்த சேர்ந்த மாணவ மாணவிகள் உறுதி மொழியை வழிமொழிந்து ஏற்றுக் கொண்டனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான கே. எஸ். ஆர். அக்சரா பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. உமா தலைமை யேற்றார். நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா,மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் கல்வி நிறுவன இயக்குனர் அமுதா ஆசை தம்பி கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (அட்மின்)மோகன் ஆகியோர்முன்னிலை வகித்தனர் தமிழக முதல்வர் உறுதிமொழியை வாசிக்க மாணவ மாணவிகள் வழிமொழிந்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதனை அடுத்து மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது இதனை நாமக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமாமாவட்ட காவல் கண்காணிப்பாளர்ராஜேஷ் கண்ணா ஆகியோர்கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் போதை இல்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி வந்தனர் வந்தனர். இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய படி சென்றனர்.