நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது;
தென்காசி மாவட்டம் வெள்ளாளன்குளம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் தலைமை வகித்தார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜா முகாமினை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் மருந்து பெட்டகங்கள் வழங்கி பேசினார், மேலநீலீதநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ் கான், மருத்துவ அலுவலர் ஜாபர்அலி, தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்து மருந்துகள் மற்றும் மருந்துவ ஆலோசனைகள் வழங்கினர். கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஸ்கேன், நீர், இரத்தம் ஆய்வக பரிசோதனைகள், எக்ஸ்-ரே, இசிஜி, தடுப்பூசி பணிகள் அனைத்தும் அரசு சார்பாக இலவசமாக வழங்கப்பட்டன மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர். இதில் கல்லூரியின் நிறுவனர், மற்றும் தாளாளர் கல்யாணசுந்தரம், முதல்வர் ஜெனிட்டா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செயின்ஸ் குமார், சுகாதார ஆய்வாளர்கள். சுப்பையா கண்ணன் பாலசுந்தரம் , செல்வ கிருஷ்ணன், ஜெயராம், சுகுமார், சுரேஷ், கண் சிகிச்சை உதவியாளர், முட நோக்கு உதவியாளர், சமுதாய நலசெவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், நிலைய செவிலியர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.