திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று முன்தினம் பெய்த மழையில் சிறிய பாறை மலைப்பாதையில் சரிந்து விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது. உடனடியாக அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து மற்றும் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் ஆகியோரின் உத்தரவின் பேரில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பாறை அப்புறப்படுத்தப்பட்டது