திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் படுத்திருந்த சிறுத்தைப்புலி நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் படுத்திருந்த சிறுத்தைப்புலி நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் படுத்திருந்த சிறுத்தைப்புலி நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் சிறுத்தைப்புலி படுத்திருந்ததை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு மான்கள், சிறுத்தைப்புலிகள். யானைகள், காட்டெருமைகள், புலிகள் உள்ளிட்டவன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள சாலையில் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தைப்புலி திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள தடுப்புச்சுவரில் படுத்திருந்தது நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதைத்தொடர்ந்து சிறிதுதூரம் சாலையில் அங்கும் இங்கும் நடமாடியது. அதன்பின்னர் அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் நேரில் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டனர். பின்னர் வாகனங்களை விட்டு கீழே இறங்காமல் சிறுத் தைப்புலியை தங்கள் செல் போனில் புகைப்படம் மற்றும்வீடியோ எடுத்தனர்.. சிறிது நேரம் கழித்து சிறுத்தைப்புலி சென்றதும் புறப்பட்டனர்.