தாளவாடி அருகே ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி விவசாயிகள் பீதி
தாளவாடி அருகே ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி விவசாயிகள் பீதி
தாளவாடி அருகே ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி விவசாயிகள் பீதி தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் பகுதியை க சேர்ந்தவர் சிவண்ணா. இவர் தனது வீடு முன்பு பட்டி அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவற்றை கு நேற்று முன்தினம் இரவு பட்டியில் கட்டி வைத்துவிட்டுதூங்க சென்றுவிட்டார். அதன்பின்னர் நேற்று காலை அவர் தூங்கி எழுந்து பார்த்த போது அங்குள்ள ஒரு ஆடு மட்டும் படுகாயங்களுடன் செத்து கிடந்தது. அதன் அருகே விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுகுறித்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பதிவாகியிருந்த கால்தடத்தை ஆய்வு செய்தனர். இதில் பதிவானது சிறுத்தைப்புலியின் கால்தடம் என்பது உறுதியானது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி சிவண்ணாவின் பட்டிக்குள் புகுந்துள்ளது. பின்னர் அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டை கடித்து குதறி கொன்று விட்டு வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தைப்புலி வேட்டையாடி வருவதால் அந்த பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.