நகராட்சி நுண் உர மையத்தில் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை துவக்கம்

நகராட்சி நுண் உர மையத்தில் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை துவக்கம்

Update: 2024-08-14 06:17 GMT
திருச்செங்கோடு நகராட்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள நுண் உர மையம் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவை தொடர்ந்து மையத்தில் மைக்ரோ கம்போஸ்ட்களில் இருந்து தயார் செய்யப்பட்ட செழிப்பு உரம், ஆர்கானிக் கிளீனிங் பவுடர்கள் மற்றும் கொசு விரட்டி ஆகிய பொருட்களின் முதல் விற்பனையை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், மனோன்மணி சரவண முருகன், தாமரைச்செல்வி மணிகண்டன், புவனேஸ்வரி உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நுண் உர மைய கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நுண்ணுயிர் மையத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நகர் மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார் மேலும் இதே நுண்ணுயிர் மையத்தை தூய்மையான முறையில் பராமரித்து மருத்துவ குணங்கள் வாய்ந்த செடிகளையும் பயிரிட்டு வளர்த்திட வேண்டும் என பணியாளர்களை அறிவுறுத்தினார்.

Similar News