திருத்தணி முருகன் கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம்
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை 11 கோடி நஷ்டத்தில் இயங்கியது, தற்போது திமுக ஆட்சியில் 55 கோடி லாபத்தில் இயங்க உள்ளது தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை 11 கோடி நஷ்டத்தில் இயங்கியது, தற்போது திமுக ஆட்சியில் 55 கோடி லாபத்தில் இயங்க உள்ளது தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். திருத்தணி அருகிலுள்ள சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஹோட்டல் உள்ளது இதில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வரும் சுற்றுலாத்துறை பேருந்துகள் ஹோட்டலில் நின்று செல்வது குறித்தும் சுற்றுலாத்துறை ஹோட்டலில் உணவு தரம் குறித்தும் சுற்றுலாத்துறை ஹோட்டல் மேலாண்மை குறித்தும் சுற்றுலாத்துறை பேருந்தில் வந்தவர்களிடம் நேரில் கேட்டறிந்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இதனைத் தொடர்ந்து திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சுவாமி தரிசனம் செய்தார் திருக்கோயில் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்கள், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தது சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு தினந்தோறும் சுற்றுலாத்துறை பேருந்துகள் சென்று வருகிறது இந்த பேருந்துகளில் வரும் பயணிகளுக்கு வசதிகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஓட்டல் திருத்தணி அருகில் உள்ளது பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரம் குறித்து கேட்டு அறிந்தேன் புதிய பேருந்துகள் அதிகளவு சுற்றுலாத்துறை மூலமாக தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது மேலும் தற்போது திருத்தணி சுற்றுலா தளம் என்பதால் திருத்தணி முருகன் கோயில் உள்ள பகுதி மற்றும் முருகன் கோவில் மற்றும் உப கோயில்கள் பகுதிகள் அருகில் உள்ளது என்று சுற்றுலாத்துறை மூலமாக விளம்பர பலகை சுற்றுலாத்துறை ஹோட்டலில் திருத்தணி அருகில் வைக்கப்படும் என்று தெரிவித்தார் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 11 கோடி நஷ்டத்தில் இயங்கிய சுற்றுலாத்துறை தற்போது 55 கோடி லாபம் இயங்கக்கூடிய அளவிற்கு சுற்றுலாத்துறை மேம்பட்டு உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். அமைச்சரின் இந்த நிகழ்வின் போது சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.