அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2024-09-20 05:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் ஆட்சியர் அலுவலகம் முன்பு எந்தவித போராட்டங்களுக்கும் அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்து இருந்ததை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விஷயத்திலா தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதேபோன்று தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு வெயில் அடிப்பதால் ஏராளமான குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிநீர் பாசனப் பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டுள்ள வாழைப் பயிர்கள் மற்றும் வெற்றிலைக் கொடிக்கால் பூ விவசாயம் ஆகியவை பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில் உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் வடகால், தென்கால், மேல கால், கீழ கால் ஆகிய நான்கு கால்வாய்கள் வழியாக குளங்கள் நிரம்பும் வகையில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தின் போது குளங்கள் முழுவதும் நிரம்பி உடைந்து நீர் கடலுக்குச் சென்று வீணானது அதேபோன்று இல்லாமல் இப்போது உடனடியாக தண்ணீர் திறந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது: விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு 771 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனா். இந்த தகவல்களை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிா்ந்து அனைத்து விவசாயிகளும் பயன்பெற செய்ய வேண்டும். 2023- 2024ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை உளுந்து பயிருக்கு ரூ. 58.24 கோடி, பாசிப் பயறுக்கு ரூ. 11.38 கோடி, மக்காச்சோளத்துக்கு ரூ. 89.21 கோடி, கம்புக்கு ரூ. 6.79 கோடி, எள்ளுக்கு ரூ. 54 ஆயிரம் என மொத்தம் ரூ. 165.63 கோடியும், தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ. 21.96 கோடியும் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகை இம்மாத இறுதிக்குள் வந்துவிடும். சில பகுதிகளுக்கு இழப்பீட்டுத் தொகை குறைந்திருப்பது தொடா்பாக ஒருங்கிணைப்புக் குழு மூலம் ஆய்வு செய்து, காப்பீட்டு நிறுவனத்துக்கும், மத்திய வேளாண் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும். எனவே, காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனைமரங்களைக் கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஆய்வு செய்து கோட்டாட்சியா் அறிக்கை அளிக்க வேண்டும் என்றாா். ஆட்சியருக்கு பாராட்டு: விவசாயி வேளாண்மை திட்டங்கள், மானிய உதவிகள் தொடா்பான விபரங்கள், உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் போன்றவை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Similar News