பொது மக்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான சேவை திட்டம்.
பொது மக்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான சேவை திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் 324 ஐ லயன்ஸ் மாவட்டம் மண்டலம் 4 ல் விரிக்கதிர் முதல் வெண்ணிலவு வரையிலான சேவை திட்டங்கள் நிகழ்வு மாவட்ட தலைவர் கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் என்.சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். 324 ஐ லயன்ஸ் மாவட்ட ஆளுநர் ஆர்.அன்பரசு சேவை திட்டங்களை துவக்கி வைத்தார். கருங்குழியில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளிக்கு புதிதாக உணவு கூடம் தட்டிக் கொடுக்கப்பட்டது, சாலை ஓர பழம் வியாபாரம் செய்யும் பெண்மணிக்கு மூன்று சக்கர சைக்கிள்பழங்கள் வழங்கப்பட்டது, மேலும் அரசு பள்ளிகளுக்கு 100 மரக்கன்றுகள் அதனை பாதுகாக்கும் முள்வேலி உள்ளிட்ட உபகரணங்கள் என ஒரு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் புற்றுநோய் விழிப்புணர்வு துண்டறிக்கைகளும், சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட்டாரத் தலைவர்கள் சீனிவாசன், மற்றும் பி எஸ் டி பயிலரங்க மாவட்ட தலைவர் வரதராஜன், மற்றும் கருங்குழி லயன்ஸ் சங்க தலைவர் யயாத்தி, செயலாளர் தினேஷ், பொருளாளர் தமிழ்மாறன், மாவட்ட நிர்வாகிகள் குமார், பார்த்திபன் ,பாபு, விஜய் மற்றும் லைன்ஸ் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்