தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
200 பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட படாளம், வீராணகுணம் ஆகிய அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர்கள் படாளம் சத்யசாய், பொன்சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 200 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்புராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.