நீர் பழனியில் முட்டை கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்!

நிகழ்வுகள்

Update: 2024-08-15 04:29 GMT
விராலிமலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பு மற்றும் உயர் ரக கோழி முட்டையை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி முகாம் நீர் பழனி கிராமத்தில் நடந்தது. நீர் பழனி கால்நடை டாக்டர் தமிழ்செல்வன் உயர் ரக கோழி முட்டைகளை உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறுகையில் சரியான கோழி இனங்களை தேர்ந்தெடுத்து நல்ல ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலமும் சுத்தமான மற்றும் வசதியான கட்டடத்தை பராமரித்தல் மூலமும் உயர்தர முட்டைகளை பெறலாம். முட்டையிடும் கோழிகளுக்காக தீவனங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. கால்சியம் ,புரோதம் மற்றும் விட்டமின் உள்பட முட்டைகள் முக்கியமானதாகும் முட்டை கோழி வளர்க்கும் போது 50 கோழிக்கு ஒரு தண்ணீர் தொட்டி ஒரு தீவனத் தொட்டி வைத்தால் போதும் என தெரிவித்தார்.

Similar News