சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
திருச்செங்கோடு நகராட்சி 1, 4 ,9 ,13 , 26 ,ஆகிய வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிரூ.46 லட்சம் மதிப்பில்நலத்திட்ட பணிகள் துவக்க விழாமாலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது 1வது வார்டு சீதாராம் பாளையம் பழனியாண்டவர் கோவில் தோட்டம் பேருந்து நிறுத்தம் அருகில் மழை நீர் வடிகால் உடன் கூடிய காங்கிரீட் சாலை அமைத்தல் பணிக்காக 7லட்சத்து 80 ஆயிரம் மற்றும் வார்டு எண் 13 பகுதியில் எட்டிமடை அம்பேத்கர் நகரில் மழை நீர் வடிகாலுடன் கூடிய சிறு பாலம் அமைத்தல் ரூ. 10 லட்சம் மதிப்பிலும் திருச்செங்கோடு நகராட்சி நாலாவது வார்டு எட்டிமடை பகுதியில் மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறு பாலம் அமைத்தல் ரூ 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், வார்டு எண் 26 மலை சுற்று சாலை பொதுக்கழிப்பிடம் அருகில் முப்பதாயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும்,வாடி என் 9 சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சிறு பாலம் மற்றும் நிழல் கூடம் அமைக்க ரூ.7,40 ஆயிரம் மதிப்பிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி2024-25 ரூ 46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் டி. என். ரமேஷ், மாதேஸ்வரன், சினேகா ஹரிகரன்,ராதா சேகர்.ரமேஷ் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் நகர செயலாளர் குமார் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.