வெள்ளகோவிலில் குழந்தையுடன் யாகசம் செய்த பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
வெள்ளகோவிலில் குழந்தையுடன் யாகசம் செய்த பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுரைப்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அகமது பாஷா மேற்பார்வையில் துறை அலுவலர்கள் நேற்று வெள்ளகோவில் நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தெருவோர வாழ் குழந்தைகள், மற்றும் யாகசம் செய்யும் குழந்தைகள் மீட்பு நடவடிக்கையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நாளாக இருந்ததால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் முத்தூர் சாலை, புதிய பஸ் நிலையம், கடைவீதி, கரூர் ரோடு பகுதி மற்றும் வாரச்சந்தை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வார சந்தையில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் யாசகம் செய்து கொண்டிருந்தார். அவரை குழந்தையுடன் மீட்டு அலுவலர்கள் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்வதாக திருப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது வெள்ளகோவில் காவல்துறையினர் உடன் இருந்தனர். இதுகுறித்து மீட்பு குழுவினர் கூறுகையில் "இந்த மாதிரி குழந்தையுடன் தெருவிலோ அல்லது பஸ்ஸில் நிலையத்திலோ பெண்கள் யாசகம் செய்தால் இலவச அழைப்பு எண் 1098 அழைத்தால் நாங்கள் குழந்தையுடன் பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்ப்போம்" எனக் கூறினார்கள்.