புதுக்கோட்டையில் மூன்று மரகத பூஞ்சோலைகள் திறப்பு!

அரசு செய்திகள்

Update: 2024-08-15 04:32 GMT
புதுக்கோட்டை குப்பையன்பட்டியில் உருவாக்கப்பட்டுள்ள மரகதப் பூஞ்சோலையில் குத்துவிளக்கேற்றி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் மு. அருணா. புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 3 மரகதப் பூஞ்சோலைகளை மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தார். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் சார்பில் மாநிலம்மரகதப் பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சென்னையிலிருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார். இத்திட்டத்தில் புதுக்கோட்டை வட்டத்தில் குப்பையன்பட்டி கிராமத்திலும், திருமயம் வட்டத்தில் ஊனையூரிலும், குளத்தூர் வட்டத்தில் வாலியம்பட்டியிலும் அமைக்கப்பட்ட 3 மரகதப் பூஞ்சோலைகளையும் முதல்வர் திறந்துவைத்தார். இம்மூன்று பூஞ்சோலைகளும் மொத்தம் ரூ. 71.45 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்த 1875 மரக்கன்றுகள் நடவு உருவாக்கப்பட்டுள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் தலா ஒரு ஹெக்டேரில் 75 மரகதப் பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதற்காக ஒவ்வொன்றிலும் ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டு தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இப்பூஞ்சோலைகளின் பராமரிப்பு அந்தந்தப் பகுதி ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்படவுள்ளது. குறிப்பிடத்தக்கது. குப்பையன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு. அருணா, மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

Similar News