அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்த வருவாய் துறையினர் பயனாளிகள் சார் ஆட்சியரிடம் புகார்.,

அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்த வருவாய் துறையினர் பயனாளிகள் சார் ஆட்சியரிடம் புகார்., பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறை தீர்ப்பு முகாமில் போடிபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை கோரி புகார் மனு அளித்தனர்.,

Update: 2024-09-23 12:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்த வருவாய் துறையினர் பயனாளிகள் சார் ஆட்சியரிடம் புகார் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறை தீர்ப்பு முகாமில் போடிபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை கோரி புகார் மனு அளித்தனர் பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம் ஊராட்சியில் 19.6.2016ம் ஆண்டு ஏழை எளிய கூலி வேலைக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட மக்கள் 28 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது பயனாளிகள் 28 பேரும் தங்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனைகளை அளவீடு செய்து தருமாறு வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை அளித்து வந்தனர் இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா 28 பயனாளிகளில் 12 பேரை தகுதியற்றவர்களாக கூறி பட்டாவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நீதிமன்றம் இலவச வீட்டு மனை பட்டா சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது இதனை அடுத்து ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 2016 ஆம் ஆண்டு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா இடங்களை அளவீடு செய்து தராமல் காலம் தாழ்த்திய வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

Similar News