பொது விருந்தில் உணவருந்திய மாவட்ட ஆட்சியர்
பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்திய ஆட்சியர்
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில், 78-வது சுதந்திர தினவிழாவையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற பொது விருந்து மற்றும் சிறப்பு வழிபாட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப. கலந்துகொண்டு பொதுமக்களுடன் உணவருந்தினார். உடன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணை சிவலிங்கம் உட்பட பலர் உள்ளனர்.