பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் மரகத பூஞ்சோலை திறப்பு

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் மரகத பூஞ்சோலை திறப்பு

Update: 2024-08-15 12:22 GMT
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் மரகத பூஞ்சோலையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் பெரும்பேர் மலைக்குன்று அடிவாரத்தில் நிழல் தரும் மரங்கள் பூத்தரும் மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் உள்ளிட்ட மரங்கள் வைத்து நடைபாதை அமைத்து மரகத பூஞ்சோலை உருவாக்கப்பட்டது. இந்த மரகத பூஞ்சோலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அந்த நேரத்தில் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன், பெரும்பேர் கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சாவித்ரி சங்கர் ஒன்றியக் குழு உறுப்பினர் பார்த்தசாரதி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மரகத பூஞ்சோலை திறந்து வைத்து கொண்டாடினர். இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வசந்தா கோகுலகண்ணன்,பொன்மலர் சிவகுமார், பார்த்தசாரதி, வெளியம்பாக்கம் சிவகுமார்,ஊராட்சி செயலர் ஏழுமலை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மரகத பூஞ்சோலியை பார்வையிட வந்த பெரும்பேர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பூஞ்சோலையை பார்வையிட்டு மரம் மூலிகை செடி பாதுகாப்பது குறித்த உறுதிமொழி மேற்கொண்டனர்.

Similar News