கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
கெங்கவல்லி:கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கெங்கவல்லி ஆகஸ்ட் 15 கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் கெங்கவல்லி நகர அனைத்து வணிகர் சங்கம் கலந்து கொண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜலில் தலைமையில் நகர வணிகர் சங்க தலைவர் ஆண்டோமொரைஸ் செயலாளர் எல் முருகன் பொருளாளர் வேல்முருகன் இணைச் செயலாளர்கள் பரணி மோகன் கார்த்திகேயன் பெற்றோர் ஆசிரியர் கழக அக்பர் பாஷா பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சாமிவேல் தேசிய கொடியை ஏற்றினார் மாணவர்கள் ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்கள் உறுதிமொழி வாசித்து ஏற்புரை செய்தனர பள்ளியின் சுற்றுச் சுவர்களில் விடுதலைப் போராட்ட தேச தலைவர்களின் படங்களுக்கு வீர வணக்கம் மரியாதை சிறப்பு செய்யப்பட்டது சுதந்திர தின விழா சிறப்புரை வணிகர் சங்கத் துணைத் தலைவரும் காமராஜர் அறக்கட்டளையின் செயலாளருமான முருகானந்தம் விடுதலைப் போராட்ட தேசத் தலைவர்கள் பற்றி மாணவர்களின் ஒழுக்க நெறி வருங்கால வளர்ச்சிகள் அரசு பள்ளியின் சாதனைகள் குறித்து பேசினார் 78வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வண்ணம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் நாட்டு நல பணித்திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது நாட்டு நல பணித்திட்ட அலுவலர் அன்பரசன் ஆசிரியர் மணிகண்டன் ஆசிரியர்கள் கலா ராணி நடராஜன் ராஜகுமார் கலிபுல்லா குமார் சரவணன் விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் ஆசிரியர் கோதைநாயகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது