தம்மம்பட்டியில் உலிபுரம் ஊராட்சியில் மரகத பூஞ்சோலை பூங்கா

பூங்கா

Update: 2024-08-16 10:38 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஊராட்சியில் கோட்ட பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் அரசு மரகத பூஞ்சோலை பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டன. முதியவர்கள் ஓய்வு எடுக்கும் குடில், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தம்மம்பட்டி வனத்துறையினரால் மரகத பூஞ்சோலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் வனசரகர் முருகேசன், உலிபுரம் ஊராட்சி தலவைர் கஸ்தூரி, கோவில் அறங்காவலர் சத்தியபாமா, வனவர் ராமகிருஷ்ணன், பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கதிர்வேல் நன்றி கூறினார். தம்மம்பட்டி அருகே தகரப்புதூர் ஊராட்சியிலும் மரகத பூஞ்சோலை பூங்கா திறக்கப்பட்டது.சுருக்கு

Similar News