மயூரநாதர் ஆலயத்தில் ஆடி கடைவெள்ளி லட்ச தீபம் ஆதீனம் பங்கேற்பு
பழமை வாய்ந்த மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு லட்ச தீப திருவிழா. திருவாவடுதுறை ஆதீனம் முதல் தீபத்தை ஏற்றி துவங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
:-- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த மாயூர நாதர் ஆலயம் அமைந்துள்ளது இங்கு அபயாம்பிகை நற்பணி மன்றம் சார்பில் 34 ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு முதல் தீபத்தை ஏற்றி வைத்து சுவாமி அம்பாள் சன்னதிகளில் வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி மற்றும் பிரகாரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். அம்பாள் சன்னதியில் பாலசகாயம் என்பவரால் தத்ரூபமாக வரையப்பட்ட சிவன், விநாயர், திருவாவடுதுறை ஆதீனம் படங்கள் பக்தர்களை கவர்ந்தது. அகல்விளக்கு தீபங்களால் சுவாமி சன்னதிகள் ஜொலித்தது.