பத்மநாபபுரத்தில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி

Update: 2024-08-17 15:27 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற மற்றும் புதிதாக துவங்கவுள்ள பணிகளை  பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் இன்று (17.08.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில்-       குமாரபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மணலிக்கரை ஆர்.சி தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.14.60 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை இன்று திறந்து வைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.        மேலும் கொற்றிக்கோடு பாஞ்சிவிளையில் பட்டணம் கால்வாய் சானல் குறுக்கே பாலம் அமைக்க ரூ.14.50 இலட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய பாலம் கட்டப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.       கோதநல்லூர் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட முட்டைக்காடு ஆதிதிராவிடர் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி ரூ.30 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் புதிய கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என கூறினார்.      நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், கோதநல்லூர் முதல்நிலை பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிரேம் குமாரி,  அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News