நல்லூர் பகுதியில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நல்லூர் வில்வனேஸ்வரர் ஆலயம் முன்பு செல்லும் மணிமுத்தாற்றின் கரையில் படித்துறை மற்றும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், இலங்கியனூர் கிராமத்திற்கு முன்பு செல்லும் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். ஐவதக்டி மணிமுத்தாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும், இலங்கியனூர் அருகே ரயில் வழித்தடத்தில் பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இந்த கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்திய செந்தில்குமார் நல்லூர் மற்றும் இலங்கியனூர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, பொறியாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிகாமணி, மாவட்ட கவுன்சிலர் சக்தி விநாயகம் ஆகிருடன் கலந்து ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர், திமுக நிர்வாகிகள் அன்புக்குமரன், தனசேகர், முருகேசன், காங்கிரஸ் கட்சி சின்னத்துரை, ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.