கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாட்ஸ்அப்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து பரவிய வதந்தியால் பெண்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-08-17 16:06 GMT
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள் தமிழக அரசு பொறுப்பேற்ற பின்பு மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் 2023ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நவம்பர் மாதம்  இரண்டாம் கட்டமாக விடுபட்ட பெண்களுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பெண்களுக்கு வழங்கப்பட்டது. நிலையில் கடந்த ஒரு வார காலமாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று , திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விடுபட்ட பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும் அவர் பெறப்படும் விண்ணப்பங்கள் முழுவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு மகளிர் உரிமைக்காக வழங்கப்படும் என போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட இதனை உண்மையென நம்பி திருப்பூர் மாவட்டத்தின்  காங்கேயம் , பெருமாநல்லூர் , முதலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தனர். தொடர்ந்து அதுபோன்ற முகாம்கள் எதுவும் இன்று நடைபெறவில்லை என ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறினாலும் கூட பெண்கள் தொடர்ந்து காத்திருந்தனர்.

Similar News