மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி கரூரில் நடைபெற்றது.

மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி கரூரில் நடைபெற்றது.

Update: 2024-08-18 07:10 GMT
மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி கரூரில் நடைபெற்றது. மனித வாழ்வில் உடல் நலம் முக்கியமானது. உடல் நலம் பேன, பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும்,நடை பயிற்சியும், ஓட்ட பயிற்சியும் உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்ளும். வளர்ந்து வரும் அவசரகால சூழலில் இந்த பயிற்சியை ஒவ்வொரு தனி மனிதரும் மேற்கொள்ள தவறி விடுகின்றனர். அதுபோன்ற நபர்களின் எண்ணங்களில் உள்ள சிந்தனைகளை மாற்றத்தான் இது போன்ற மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாறிவரும் சூழலில் மரங்களை வளர்ப்பதின் அவசியம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இதன் அடிப்படையில் கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் டைமன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இன்று நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பொது பிரிவினருக்கு 7- கிலோமீட்டர் தொலைவிலும், இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பிடித்த நபர்களுக்கு முதல் பரிசு பத்தாயிரமும், 2-ம் பரிசு ரூ 7500, 3-ம் பரிசு 5,000, ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடித்த 10 பேருக்கு தலா ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் முணைப்போடு ஒவ்வொருவரும் தங்களது தனி திறன்களை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

Similar News