குமரி : பிரபல எழுத்தாளர் பால்ராசய்யா காலமானார்

உடல் நலக்குறைவால்

Update: 2024-08-18 11:48 GMT
குமரிமாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராசய்யா (58). நாடக கதை ஆசிரியராக துவக்கத்தில் எழுத்துலகில் அடியெடுத்து வைத்த இவர், பின்னர் குமுதம் வார இதழில் வெளியான ஒரு பக்க கதைகள்  மூலம் பிரபலமானார்.         தொடர்ந்து நாவல்கள், தொடர்கதைகள்  எழுதி ஐரேனிபுரம் பால்ராசய்யா என்ற பெயரில் பன்முக எழுத்தாளராக அறியப்பட்டார். பனையேற்று தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிய வடலி மரம் என்ற நாவல் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார்.        உடல் நலம் பாதிப்பு காரணமாக ஐரேனிபுரம் பால்ராசைய்யா நேற்று உயிரிழந்தார்.  அவரது உடல் இன்று (18-ம் தேதி) குமரி - கேரளா எல்லை பகுதியான உதியன்குளம் கரை என்ன இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.       இறுதி நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தொண்டு நிறுவனத்தினர்  உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Similar News