அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவர்களின் பிறந்தநாள் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கோவிலில் சிறப்பு வழிபாடு..

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவர்களின் பிறந்தநாள் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கோவிலில் சிறப்பு வழிபாடு..

Update: 2024-08-18 11:51 GMT
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சின்னம்மா சசிகலா அவர்களின் 70.வது பிறந்தநாளை கழக நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் என்.கோபால், தலைமையில் ராசிபுரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் சசிகலா அவர்களின் பெயர், ராசி, நட்சத்திரத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து அவர்கள் நலமுடன் வாழவும், 2026 இல் கழகத்தை ஒருங்கிணைத்து தலைமையேற்று விரைவில் சிறப்பாக வழிநடத்த வேண்டியும், நிர்வாகிகள் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் அனைவருக்கும் இனிப்புகள், மற்றும் பிரசாதங்கள் வழங்கி உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் நகரக் கழக பொறுப்பாளர் எஸ். வேலுச்சாமி, மற்றும் என்.குமார் எம். சிவகுமார், கே. ஆறுமுகம், பி. நாகராஜன், எம். தங்கதுரை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிர்வாகிகள் சின்னம்மா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.

Similar News