நல்லாத்துக்குடியில் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தினர் கஞ்சி கலையம் ஊர்வலம்
மயிலாடுதுறையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்; நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்று வழிபாடு
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமம் ஓம்சக்தி நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளது. இக்கோயிலில் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு செவ்வாடை உடுத்திய நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் மயிலாடுதுறை சியாமளாதேவி கோயிலில் இருந்து கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து ஊர்வலமாக ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கலயத்தில் சுமந்து வந்த கஞ்சி அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.