பேச்சிப்பறை அணையில் இருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

Update: 2024-08-19 05:30 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாளை உட்ப்பட அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் இருந்து வருகின்றன.      தற்போது மாவட்டத்தில் மீண்டும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பேச்சிப் பாறை அணை  நீர்மட்டம் தற்போது 45 அடியை நெருங்கி வருகிறது.      இதற்கிடையில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், பேச்சிப்பாறை  அணையில் இருந்து நேற்று உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கோதையாற்றில் நேற்று பிற்பகல் முதல் வெள்ளம் அதிக அளவில் பாய்ந்தது. இதனால் திற்பரப்பருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் அபாய எச்சரிக்கை விடுத்ததுடன் திற்பரப்பு அருவியில் நேற்று பிற்பகல் முதல் இன்றும் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Similar News