விஸ்வகர்மா சமுதாய மக்கள் பூணூல் அணியும் விழா

மயிலாடுதுறையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வகர்ம சமுதாய மக்கள் பூணூல் அணியும் விழா:- கூறைநாடு காமாட்சி அம்மன் கோயிலில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஓரே இடத்தில் கூடி பூணூல் மாற்றிக்கொண்டனர்

Update: 2024-08-19 06:45 GMT
மயிலாடுதுறை கூறைநாட்டில் விஸ்வகர்ம சமுதாய மக்களின் கோயிலான காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு 107-வது ஆண்டு பூணூல் அணியும் விழா இன்று நடைபெற்றது. கோயில் தக்கார் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தினர், விஸ்வகர்ம இளைஞரணி நிர்வாகிகள், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், ஸ்ரீவிஸ்வகர்ம சமூகத்தினர் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் 100க்கும் மேற்பட்டோர் கோயிலின் முன்பு ஒரே இடத்தில் கூடி அமர்ந்து, ஆசமனம் மற்றும் காயத்ரி மந்திரம் கூறி சமுதாய மரபுப்படி பழைய பூணூலை மாற்றி புதிய பூணூல் அணிந்து கொண்டனர்.

Similar News