தாராபுரம் நகர்ப்புற மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு;

Update: 2024-08-19 09:13 GMT
தாராபுரம் நகர்ப்புற மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு தாராபுரம் அமராவதி ஆற்று படுகையில் அமைந்துள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கூடிய முக்கியமான குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அதை மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நேற்று முதல் ஒரு வார காலத்திற்கு தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் வினியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரப்பெறும் இந்த சிரமமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த பராமரிப்பு வேலை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே மிக விரைவில் சரி செய்யப்படும் தண்ணீர் வரப்படாத வாடுகளுக்கு லாரி மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்படும் இந்த விசயத்தை கருத்தில் கொண்டு மக்கள் குறிப்பிட்ட காலத்திற்கு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் இந்த அறிவிப்பினை வெளியிட்டனர்.

Similar News