பிள்ளையால் ஏமாற்றப்பட்டு பிச்சை எடுக்கும் நபர் தன்னை கருணை கொலை செய்ய கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த முதியவர் ஒருவர் மகன் விரட்டியதால் யாசகம் பெற்று வாழ்ந்து வரும் நிலைக்கு ஆளான தன்னை கருணை கொலை செய்து விடும்படி மனு அளித்து கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது
. மயிலாடுதுறை அருகே மன்னிப்பள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிங்காரம்(76). 16 வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டார். டீக்கடை நடத்தியும் கூலி வேலையும் செய்து வந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 1 ஏக்கர் நிலம் மற்றும் வீடுடன் 50குழி இடம் உள்ளது. 25 குழி இடத்தை மகளுக்கு எழுதி வைத்த நிலையில் தன் சொத்தை மகன் எழுதி வாங்கிகொண்டு வீட்டை விட்டு விரட்டிவிட்டதால் 10 வருடங்களாக தவித்து வருவதாக சிங்காரம் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2021-20022 ஆம் இதுபோல் மனு கொடுத்த பொழுது சோழம்பேட்டை அருமை இல்லம் முதியோர் இல்லத்தில் சமூக நலத்துறையினரால் தங்கவைக்கப்பட்டருந்தார். மகனும் மகளும் வந்து முதியவர் சிங்காரத்தை நன்றாக பராமரிப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் உறுதியளித்து அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அவர் வாங்கி வந்த முதியோர் உதவித்தொகையும் ரத்து செய்ய வைத்த மகன் தொடர்ந்து கொடுமைபடுத்துவதால் தற்போது வீதியில் நிற்பதாகவும், வயோதிகம் மற்றும் முதுமையினால் நடமாட்டம் பார்வை குறைபாடு வயோதிக மூப்பினால் ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதால் டீகுடிக்க கூட வழியில்லாமல் வேப்பங்கொட்டை பொருக்கியும், யாசகம் செய்து வாழ்ந்து வருவதற்கு தன்மானம் தடுப்பதால் தனது வயது மூப்பையும், மகனின் துன்புறுத்தலையும் கருத்தில் கொண்டு தன்னை கருணை கொலை செய்து விடும்படி மனு அளித்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்