சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக செல்போன் பேசிவரை தட்டக்கேட்ட இன்ஸ்பெக்டருக்கு தந்தை பளார்
மயிலாடுதுறை குத்தாலம் கடைவீதியில் போக்குவரத்திற்கு இடையூராக நின்று பேசிக் கொண்டிருந்தவரின் செல்போனை பிடுங்கியதாக குத்தாலம் காவல் ஆய்வாளரை அடித்ததால் தந்தை மகனுக்கு சிறைவாசம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜோதிராமன். இவர் கடைவீதியில் போலீஸ் வாகனத்தில் சென்றபோது ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மகன் கிஷோர் கல்லூரி மாணவன் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றதாக கூறப்படுகிறது. காவல் ஆய்வாளர் ஜோதிராமன் வாகனத்திற்கு வழி தராமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்த கிஷோரை கண்டித்தபோது கிஷோர் திமிராக பேசியதால் காவல் ஆய்வாளர் ஜோதிராமன் கிஷோரின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு காவல் நிலையம் வர சொல்லியுள்ளார். தொடர்ந்து குத்தாலம் காவல் நிலையத்திற்கு கிஷோருடன் வந்த அவரது தந்தை கடைவீதியில் தன் மகனை அடித்து செல்போனை ஏன் பிடுங்கி வந்தீர்கள் என்று கூறி மகேஸ்வரன் குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் காவல் ஆய்வாளர் ஜோதி ராமனை மகேஸ்வரன் கன்னத்தில் அறைந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரன் மற்றும் அவரது மகன் கிஷோர் மீது போலீசார் காவல் ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கி மிரட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.