தாளவாடியில் வீடுகள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
தாளவாடியில் வீடுகள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
தாளவாடியில் வீடுகள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்குகள் தாளவாடி நகருக்குள்புகுந்தன. இந்த குரங்குகள் நகரில் உள்ள கடைகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை தூக்கி சென்றுவிடுகின்றன. மேலும் குழந்தைகள் கடைகளில் இருந்து தின் 50 பண்டங்களை வாங்கி கைகளில் வைத்தபடி தெருக்களில் நடந்து ாயி சென்றால், அதை குரங்குகள் பிடுங்கி சென்றுவிடுகின்றன. இதனால் குழந்தைகள் தெருக்களில் நடந்து செல்ல பயப்படுகிறார்கள் கண்டதும் குரங்குகளை பொதுமக்கள் விரட்ட முயன்றால், அவர்கள் மீது பாய்வது போன்று செய்கை காட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிடுகின்றன. அதுமட்டுமின்றி வீடுகளுக்குள் புகுந்து அங்கு சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளையும் பாத்திரங்களோடு தூக்கி சென்று விடுகின்றன. அதுமட்டுமின்றி காயப்போட்டிருக்கும் ட்டு துணிகளையும் எடுத்துக்கொண்டு ஓடுகின்றன. தோட்டங்களில் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களில் ஏறி அதில் உள்ள இளநீரை பறித்து குடித்து விடுகின்றன. தாளவாடியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தாளவாடி நகருக்குள் புகுந்த அனைத்து குரங்குகளையும் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடவேண்டும் என வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.