பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 2004 இல் இருந்து 2006 வரையில் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களை 01.06.2006 இல் இருந்து பணிவரன்முறை என்பதை மாற்றி அவர்கள் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து வரன்முறை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்ப்ளளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வுதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திடுக, கலைஞர் முதல்வராக இருந்த போது வழங்கிய ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்கான ஊதியத்தை பெரும் உரிமையை மீண்டும் உடனடியாக அமல்படுத்த வேண்டும், 2004 இல் இருந்து 2006 வரையில் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் 01.06.2006 இல் இருந்து பணிவரன்முறை செய்ததை மாற்றி அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணிவரன்முறை செய்திட வேண்டும் , தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக பணி மாற்றம் செய்திட வேண்டும், பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் அகமதிப்பீட்டு மதிப்பிற்கான 10 மதிப்பெண்கள் வழங்கி அம் மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும், எஸ் எஸ் எல் சி தேர்வுப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்கிட வேண்டும், பொது மாறுதல் கலந்தாய்வினை ஒவ்வொரு ஆண்டும் முறையாக நடத்திட வேண்டும். அரசாணை 73 ஐ வெளிப்படைத்தன்மையுடன் முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.