இணைச் செயலாளருக்கு அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்!
இணைச் செயலாளருக்கு அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்!
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளரும் தூத்துக்குடி 39ஆவது வட்டக் கழக செயலாளருமான பா. திருச்சிற்றம்பலத்திற்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடி மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா சுதாகர், பகுதி கழகச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே ஜே பிரபாகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ. தனராஜ், மாவட்ட வக்கீல் அணி இணைச் செயலாளர் முனியசாமி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்டக் கழக செயலாளர் சொக்கலிங்கம், மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.